-0.1 C
New York
Sunday, December 28, 2025

திருமண தொடரணியில் பங்கேற்ற 11 சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் ரத்து.

A3 நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய திருமண வாகன தொடரணியில் பயணித்த 11 வாகன சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

A3 நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்த முடியாமல் இருப்பதாக சனிக்கிழமை பிற்பகல், சுமார் 4 மணியளவில், கன்டோனல்  அவசர அழைப்பு மையத்திற்கு பல புகார்கள் வந்தன.

வாகனங்கள் ஓட்டும் முறை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது கண்டறியப்பட்டதாக Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

அந்த வாகனத் தொடரணி A3 நெடுஞ்சாலையில் இருந்து A1 நெடுஞ்சாலைக்கு பெர்னின் திசையில் சென்று கொண்டிருந்தது.

பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொண்ட வாகனத் தொடரணி, திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தது, நெடுஞ்சாலைக்கு வெளியே உள்ள மெகன்வில்லில் அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பல்வேறு மீறல்களைக் கண்டறிந்தனர்.

நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் அருகருகே சென்று கொண்டிருந்ததும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பதினொரு சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வீதிப் போக்குவரத்து அலுவலகத்தால் அந்த இடத்திலேயே ரத்து செய்யப்பட்டன.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles