-3.3 C
New York
Sunday, December 28, 2025

அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் சுவிஸ் அறிவுறுத்தல்.

பங்களாதேஷின் தற்போதைய நிலவரங்களை சுவிட்சர்லாந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகத் தளமான X இல்  வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பல வாரங்களாக நீடித்த ஆர்ப்பாட்டங்களை அடுத்து, செவ்வாய்கிழமை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்,  இதையடுத்து, இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் நாடு வந்திருக்கிறது.

இந்த நிலையில், “ஜூலை நடுப்பகுதியில் இருந்து முன்னோடியில்லாத உயிர் இழப்புகளால் பங்களாதேஷ் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சுவிட்சர்லாந்து கவலை கொண்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கூறியது,

சிறுபான்மையினர் உட்பட அனைவரின் பாதுகாப்பிற்கும் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன்,  பங்களாதேஷிற்கு அவசரமற்ற பயணங்களை தவிர்க்குமாறும், சுவிஸ் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles