சுவிஸ் எயர்லைன்ஸ் விமான நிறுவனம் வரும் வியாழக்கிழமை முதல் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
மத்திய கிழக்கின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சுவிஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சுவிஸ் விமான நிறுவனம், மீண்டும் ஈராக் மீதான வான்வெளியையும், ஈரானிய வான்பரப்பில் வடகிழக்கு பாதையையும் பயன்படுத்தும் என்றும அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெய்ரூட்டுக்கான விமானங்கள் ஒக்டோபர் இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும் எனவும் சுவிஸ் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மூலம் -Zueritoday