8.2 C
New York
Monday, March 30, 2026

2025இல் சுகாதார காப்புறுதி கட்டணங்கள் உயரும்.

2025 ஆம் ஆண்டில் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார காப்புறுதி கட்டணங்கள் குறைந்தது ஐந்து சதவீதம் உயரும் என சுவிஸ் சுகாதார காப்புறுதியாளர்களின் சங்கம், தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் காப்புறுதி செய்யப்பட்ட நபருக்கான சுகாதாரச் செலவுகள் 4.8% அதிகரித்துள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு சங்கம் இந்தக் கணிப்பை மேற்கொண்டுள்ளது.

அதேவேளை, அடுத்த ஆண்டு காப்புறுதி கட்டணங்கள் சராசரியாக 7%. உயரும் என்று மற்றொரு கணிப்பு கூறுகிறது

குறைந்த இருப்புகளைக் கொண்ட சுகாதார காப்புறுதியாளர்களுக்கு 12% க்கும் அதிகமான கட்டண அதிகரிப்புகளை விதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – swissinfo.

Related Articles

Latest Articles