16.6 C
New York
Thursday, September 11, 2025

மீண்டும் அதே பாடசாலைக்கு குண்டு அச்சுறுத்தல்.

Siders VS இல் உள்ள ஓரியண்டேஷன் பாடசாலையின் கட்டடத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதையடுத்து, அவசரகால சேவைகளின் நிபுணர்கள் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த தேடுதல் நடவடிக்கை மாலையில் நிறுத்தப்பட்டது. இன்று காலை மேலதிக தகவல்களை வழங்குவதாக பொலிசார் உறுதியளித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும் இதே பாடசாலைக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அது பொய்யான எச்சரிக்கை என பொலிசார் தெரிவித்ததுடன், 14 வயது மதிக்கத்தக்க குற்றவாளியை கைது செய்தனர்.

மூலம் – ZüriToday

Related Articles

Latest Articles