26.3 C
New York
Saturday, May 16, 2026

அடுத்த ஆண்டிலும் வீட்டு வாடகை உயரும்.

சுவிட்சர்லாந்தில்  அடுத்த ஆண்டும் குடியிருப்புகளுக்கான வாடகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, வெற்றிடமாக உள்ள வாடகை குடியிருப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த நிலை அடுத்த ஆண்டும் தொடர வாய்ப்புள்ளதாக யுபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதனால், வாடகை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாத தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து முழுவதும் 52,000க்கும் குறைவான குடியிருப்புகள் காலியாக வெற்றிடமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் இந்த வாரம் அறிவித்தது.

ஒரு வருடத்திற்கு முன்னர், 1.15%  மாக இருந்த இந்த நிலை, தற்போது, 1.08% ஆக குறைந்துள்ளது.

இந்த வெற்றிட வீதம்.  2025 இல் 1% மாக மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சுவிஸ் வங்கி UBS தெரிவித்துள்ளது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles