21.6 C
New York
Wednesday, September 10, 2025

ட்ரோன்களை கட்டுப்படுத்த திட்டம்.

சுவிட்சர்லாந்தில் பெருகி வரும் ட்ரோன்களால் இடம்பெறும் சம்பவங்களை அடுத்து அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தற்போது சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட 80 ஆயிரத்துக்கும் அதிகமான ட்ரோன்கள் உள்ளன.

இவற்றை கண்மூடித்தனமாக பறக்க விடுவதால் விபத்துகள் ஆபத்துகள் ஏற்படுவதாக சுவிஸ் விமானசேவை சமஷ்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.

விமான நிலையப்பகுதிகளில் பறக்கவிடப்படும் ட்ரோன்கள், விமானங்களுடன் மோதுகின்ற சூழல் காணப்படுகிறது.

அனர்த்த மீட்பு பணிகளின் போது ஹெலிகொப்டர்களுக்கு இவை இடையூறாக இருக்கின்றன.

கூட்டங்கள், நிகழ்வுகளுக்கு மேலாக இவை பறக்கவிடப்படுவதாவும் ஆபத்துகள் காணப்படுகின்றன.

இதனால் இவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து சுவிஸ் விமானசேவை சமஷ்டி அலுவலகம் ஆராய்ந்து வருகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles