15.9 C
New York
Wednesday, May 13, 2026

யாழில் இளைஞன் கடத்தல் ; நான்கு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நேற்று பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இழுத்து ஏற்றி கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். படுகாயப்படுத்திவிட்டு அவரை கைவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்தனர்.

Related Articles

Latest Articles