-0.7 C
New York
Sunday, December 28, 2025

ஐனாதிபதி ஆகிறார் அனுரகுமார திஸாநாயக்க! ஹரிணி அமரசூரிய பிரதமர் ஆகிறார்

2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நாளை நடைபெறவுள்ளது.

அதனையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன.

சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

Related Articles

Latest Articles