23.2 C
New York
Monday, August 17, 2026

நாடாளுமன்றம் கலைப்பு – நவம்பர் 14இல் பொதுத்தேர்தல்.

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஒக்ரோபர் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் 21ஆம் திகதி கூட்டப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles