ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மட்டுமே சுவிட்சர்லாந்து கதவுகளைத் திறக்க வேண்டும் என்று வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, பரிந்துரைத்துள்ளது.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவிஸ் மக்கள் கட்சியின் தலைவர் Marcel Dettling இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
புகலிட உரிமையை மீளாய்வு செய்ய வேண்டும். ஒரு சிறிய நாடாக, நாம் முழு உலகத்தையும் எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே, சுவிட்சர்லாந்து தனது வரலாற்றுக் கொள்கையான- ஐரோப்பாவில் மக்கள் தேவைப்படும்போது அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கைக்கு திரும்ப வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் 2023 இல் புகலிட விண்ணப்பங்கள் 23% உயர்ந்துள்ளன, மேலும் இந்த ஆண்டும் அதே மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.என்றும் அவர் கூறியுள்ளார்.
மூலம் -Swissinfo