20.4 C
New York
Thursday, April 24, 2025

தீக்கிரையானது பிரபல மலை உணவகம்.

Flims-Laax இன் Graubunden ski பகுதியின் உச்சியில் உள்ள பிரபலமான,  Foppa மலை உணவகம் நேற்று மாலை முற்றாக எரிந்து நாசமாகியது.

கடல் மட்டத்திலிருந்து 1,430 மீட்டர் உயரத்தில் உள்ள முன்னைய மலை ரயில் நிலையத்திலே இந்த உணவகம் அமைந்திருந்தது.

இங்கு நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தீயணைப்புப் படையினர் வரும் வரை, அருகில் உள்ள கட்டுமானப் பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

எனினும், தீ கட்டடம் முழுவதும் பரவியதால் உணவகம் முற்றாக எரிந்து போனது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த தீவிபத்தினால்  ஏற்பட்ட பொருள் சேதம் ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தில், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

மூலம் – zueritoday.

Related Articles

Latest Articles