16.1 C
New York
Tuesday, September 9, 2025

சுற்றுலாப் பயணிகளுக்கு சுங்கவரி விலக்கு எல்லை குறைப்பு.

சுவிசில் பொருட்களை கொள்வனவு செய்யும் சுற்றுலாப் பயணிகள்  150 பிராங்குகளுக்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களுக்கு சுங்க வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  2025  ஜனவரி 1 ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

முன்னதாக, 300 பிராங்குகளுக்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்தால் மட்டும், சுங்க வரி செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

தற்போது சுங்க வரி விலக்கு தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles