14.6 C
New York
Sunday, September 27, 2026

குண்டு மிரட்டலை அடுத்து பிராங்போர்ட்டில் அவசர தரையிறங்கிய விமானம்.

புதுடெல்லியில் இருந்து 147 பயணிகளுடன் லண்டன் சென்று கொண்டிருந்த, இந்திய விமானம் குண்டு மிரட்டல் காரணமாக நேற்றுமாலை பிராங்போர்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

X  தளம் வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று பெடரல் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

- Advertisement -

Vistara விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அதன் விமானி, ஜெர்மனியின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம், தரையிறங்க அனுமதி கேட்டுள்ளார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, விமானம் பிராங்போர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 9.02 மணிக்கு தரையிறங்கியது.

பின்னர் பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறியும் நாய்களால் சோதனை செய்யப்பட்டது.

குண்டு  எதுவும் விமானத்தில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், விமானம் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டது.

விமானம் எப்போது பயணத்தைத் தொடரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மூலம் – 20min

Related Articles

Latest Articles