சூரிச் குழந்தைகள் மருத்துவமனை நேற்று முதல் Zurich-Lengg இல் செயற்படத் தொடங்கியுள்ளது.
Kispi குழந்தைகள் மருத்துவமனையை இடம்மாற்றும் சிக்கலான நடவடிக்கை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.
நேற்று கடைசி நோயாளிகளான 65 சிறுவர்கள் புதிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பல்வேறு தரப்பினரும் இதற்கு உதவும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
சுமார் 1000 பேர் இதற்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவமனைக் கட்டடம், 760 மில்லியன் பிராங் செலவில் கட்டப்பட்டுள்ளது.
மூலம் -20min

