Schaffhausen இல் இளம் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
22 வயதுடைய பெண் ஒருவர் கடந்த திங்கட்கிழமை பொலிசாரிடம் வந்து, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 1ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், Rheinhardstrasse இல் உள்ள தனது வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது, Ebnat சுற்றுவட்டத்திற்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தன்னை பற்றைக்குள் இழுத்துச் சென்ற வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அவர் முறையிட்டுள்ளார்.
குற்றம் நடந்த போது, குறித்த ஆண் கறுப்பு உடை அணிந்திருந்தார் என்றும், முகத்தை மூடிக் கட்டியிருந்தார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்த Schaffhausen பொலிசார், சாட்சியங்களை தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மூலம் – 20min