15.2 C
New York
Monday, September 28, 2026

கார் விபத்தில் இளைஞன் படுகாயம்.

Steckborn இல் உள்ள Frauenfelderstrasse இல், நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்றுக்காலை 8 மணிக்கு முன்னதாக இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக  Thurgau பொலிசார் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்த விபத்தில் ஒரு காரை ஓட்டி வந்த 19 வயதுடைய இளைஞன் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மற்றைய காரை ஓட்டி வந்த 45 வயதுடைய பெண் காயமின்றி தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து குறித்த வீதி பல மணிநேரம் மூடப்பட்டிருந்தது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles