-3.3 C
New York
Sunday, December 28, 2025

யாழ்.தீவகத்தை சேர்ந்த ஆசிரியரிடம் 75 லட்சம் பணத்தை சுருட்டிய கொழும்பை சேர்ந்தவர் கைது!

அவுஸ்ரேலியா அனுப்புவதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடம் 75இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து சந்தேகநபரை விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் , “அவுஸ்ரேலியா செல்ல விருப்பமா ? ” என வந்த விளம்பரத்தை விளம்பரத்தை நம்பி , அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி இலக்கத்துடன் உரையாடியுள்ளார்.

அவர்களும் நம்பிக்கை தரும் வகையில் உரையாடி, ஆசிரியரிடம் இருந்து கட்டம் கட்டமாக 75 இலட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர்.

நீண்ட நாட்களாக தனது அவுஸ்ரேலியா பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , சந்தேகம் அடைந்த ஆசிரியர் , யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிடம் முறையிட்டார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கொழும்பை சேர்ந்த நபரை கைது செய்து, யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தியை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை குறித்த நபரினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் சிலரும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Related Articles

Latest Articles