20.9 C
New York
Wednesday, August 12, 2026

பாடலால் கண் கலங்க வைத்த தமிழ் சிறுமி!!

தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரு சிறுமிகள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி ஒட்டுமொத்த உலக வாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

இதன்படி, இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிசா இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி “கண்டா வரச்சொல்லுங்கள்” என்ற பாடலை பாடி அரங்கத்தினையே உருக வைத்துள்ளார்.

போரில் காணாமலாக்கப்பட்ட தனது மாமாவினை ஞாபகப்படுத்தி 30 ஆண்டு கால ஈழ யுத்த வலியை உலகளவில் சிறுமி கில்மிசா கொண்டு சேர்த்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட பலருக்காகவும் இரு நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமிக்கு சினிமாவில் பாடல் பாடுவதற்கான வாய்ப்பினையும் இந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் வழங்கியுள்ளதுடன், பாடலாசிரியர் சினேகன் பல உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.  

Related Articles

Latest Articles