நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிகளை இன்று வழங்கி வைக்கின்றார்.
இதன்போது பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற சாதனை படைத்த திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய், வைர நெக்லஸ் பரிசளித்துள்ளார்.
இந்நிலையில், 10. 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதேவேளை நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றபோது ரசிககள் பட்டாளம் சூழ்ந்ததால் நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு செல்ல பெரிதும் சிரமப்பட்டிருந்தார்