சுவிஸ் வான் மீட்பு ரேகாவின் ஹெலிகொப்டர் குழுக்கள் கிறிஸ்மஸ் காலத்தில் 150 தடவைகளுக்கு மேல், பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24 முதல் 26 ஆம் திகதி வரை இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது முந்தைய ஆண்டை விட சுமார் 20 சதவீதம் அதிகமாகும்.
மலைகளில் குளிர்கால வானிலை காரணமாக, பலரை மீட்க வேண்டியிருந்தது.
முதன்மையாக துன்பத்தில் உள்ளவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்த ஹெலிகள் பயன்படுத்தப்பட்டன.
மூலம்- 20min