சுவிஸ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SBC) பண்பலை வானொலி ஒலிபரப்பை நிறுத்தியுள்ளது.
புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர், நள்ளிரவு 11:59 மணியுடன், அனலொக் எவ் எம் ஒலிபரப்பு முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.
சுவிட்சர்லாந்து முழுவதும் சுமார் 850 அல்ட்ரா சிற்றலை ஒலிபரப்புக்கான இணைப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.
புதிய ஆண்டில் SRF1, SRF2 Kultur und SRF3 ஆகிய வானொலி ஒலிபரப்பை தொடர்ந்து கேட்க விரும்பும் எவரும், டிஜிட்டல் ரேடியோ தொழில்நுட்பமான DAB+ அல்லது இணைய வானொலிக்கு மாற வேண்டும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள சுமார் இரண்டு டசின் தனியார் வானொலி நிலையங்கள் எவ்எம் வழியாக தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்றும், 2026 இறுதி வரை சேவையை நிறுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் 10% மக்கள் எவ்எம் வழியாக மட்டுமே வானொலியைக் கேட்டனர்.
DAB+ மற்றும் இணைய வானொலியின் பயன்பாடு 2015 முதல் தொடர்ந்து அதிகரித்துள்ளது..
2023 இல் 23% இல் இருந்து 41% வரையாகவும், DAB+ மற்றும் இணைய வானொலிக்கு 26% இல் இருந்து 39% இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வாகனம் ஓட்டும்போதுஎவ்எம் வானொலி அடிக்கடி கேட்கப்படுகிறது.
மூலம்- swissinfo