சூரிச்சில் Dietikon இல் நேற்று நள்ளிரவுக்குப் பின்னர், BMW கார் ஒன்று Glanzenberg ரயில் நிலையத்தின் மீது மோதியது.
ரயில் தண்டவாளத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளான கார், ரயில் நிலையத்தினுள் நுழைந்து மோதி நின்றது.
வீதியை விட்டு விலகி, பல பொருட்களுடன் மோதி, பின்னர் ரயில் நிலைய படிக்கட்டுகளில் மோதியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் காரின் ஓட்டுநர் மற்றும் பயணி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இளைஞர்களின் காயங்களின் தீவிரம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
மூலம்- 20min.