Lausanne ரயில் நிலைய சுரங்கப்பாதையில், அண்ணன் தம்பிக்கு இடையில் நடந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 5மணிக்கு இந்தச் சம்பவம் நடந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசாரும் மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவிகளை வழங்கினர்.
45 வயதான நைஜீரியர் ஆபத்தான நிலையில் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டசிறிது நேரத்தில் இறந்தார்.
உயிரிழந்தவரின் 35 வயது சகோதரரான நைஜீரியர் கைது செய்யப்பட்டார்
இருவருக்கும் இடையே உடல் ரீதியான மோதல் ஏற்பட்டதாக Vaud கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
தற்போதைய தகவல்களின்படி, குடும்ப தகராறுதான் காரணம் என்று புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
மூலம்- 20min.