12 ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக நிலையங்களைத் திறப்பதற்கு கன்டோன்கள் அனுமதியளிக்க கூடிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
சூரிச் கன்டோன் முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய கவுன்சிலின் பொறுப்பான குழுவான, பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரிவிதிப்பு குழு ஆதரவு வழங்கியுள்ளது.
நேற்று இதுபற்றிய வாக்கெடுப்பின் போது 15க்கு 9 என்ற அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பான ஒரு சட்ட முன்மொழிவை தயாரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வருடத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக நிறுவனங்களைத் திறந்திருக்க கன்டோன்களால் அனுமதி அளிக்க முடியும்.
இதன 12 வாரங்களாக அதிகரிக்க சூரிச் கன்டோன் கோரிக்கை விடுத்திருந்தது.
மூலம்- Bluewin