எவ்எம் ஒலிபரப்பை நிறுத்தியதை அடுத்து, SRF வானொலி தனது 5 இலட்சம் நேயர்களை இழந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, SRF வானொலி நிலையங்கள், நாளாந்தம் ஒலிபரப்பை கேட்பவர்களின் எண்ணிக்கை, 23.5 வீதம் குறைந்திருக்கிறது.
அதேவேளை தொடர்ந்து எவ்எம் அலைவரிசையில் சேவையை நடத்துகின்ற தனியார் வானொலி நிலையங்கள் தமது நேயர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கின்றன என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மூலம்- 20min