ரஷ்ய ஹக்கர் குழு பல சுவிஸ் இணையத் தளங்கள் மீது புதன்கிழமை மீண்டும் சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால், Vevey, Sierre மற்றும் Dietikon போன்ற நகராட்சிகளின் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டன.
செவ்வாய்கிழமை ஹக்கர் குழு ஏற்கனவே பல நகராட்சிகளின் இணையத் தளங்களையும் ஷாஃப்ஹவுசென் கன்டோனின் இணையத்தளத்தையும் முடக்கியிருந்தது.
இதற்கு உரிமை கோரிய ரஷ்ய ஹக்கர் குழுவான NoName057 “எங்கள் தாக்குதல்களுக்குப் பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள வலைத்தளங்கள் சற்று ‘செயலிழக்கின்றன’. என, ருவிட்டரில் பதிவிட்டிருந்தது.
மூலம்- bluewin