சூரிச் கன்டோனல் பொலிசார் நேற்று இரவு Niederhasli பகுதியில் பெரும் எடுப்பிலான நடவடிக்கை ஒன்றை கொண்டிருந்தனர்.
வானத்தில் இரண்டு ஒளிரும் ட்ரோன்களும், பறந்து கொண்டிருந்தன.
அவை ஒப்பீட்டளவில் பெரியதாகவும் அதிக ஒலி எழுப்புவதாகவும் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வானில் கண்காணித்துக் கொண்டிருந்தன.
நேற்று இரவு 9:30 மணியளவில், சுமார் 20 அவசர வாகனங்கள் Niederhasliக்கு சென்று கொண்டிருந்தன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நள்ளிரவுக்கு முன்னர், சுமார் 11.30 மணியளவில், சூரிச் கன்டோனல் பொலிசார் ஒரு தீவிர நடவடிக்கையை உறுதிப்படுத்தினர்.
எனினும், இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.
இன்று காலை மேலதிக தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்- 20min.