Aargau கன்டோனில் உள்ள Kleindöttingen இல் உள்ள ஒரு துருக்கிய மளிகைக் கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
நேற்று மாலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடைக்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த ஒருவர் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை.
தப்பியோடிய குற்றவாளியைத் தேடி பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்- Bluewin