பெர்ன் மாகாணத்தில் உள்ள கோனிஸ் பள்ளிகளில் பெப்ரவரி முதல் வாரத்தில் இருந்து, ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பள்ளிகள் அறிவித்துள்ளன.
இந்த விதிமுறை மழலையர் பள்ளி முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பள்ளி கட்டடங்களுக்கும் பொருந்தும்.
கவனச்சிதறல்களைக் குறைப்பதற்கும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதற்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களை எடுத்துச் செல்லும் மாணவர்கள், வகுப்பு தொடங்குவதற்கு முன்பு அவற்றை அணைத்து விட்டு, தங்கள் ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஒரு லொக்கரில் வைக்க வேண்டும்.
கடைசி பாடத்திற்குப் பிறகு அல்லது பகல் பள்ளி முடிந்த பிறகு மட்டுமே அவர்கள் அதை மீண்டும் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற தடை அமுல்படுத்தப்படுவது இதவே முதல் முறையாகும்.
மூலம் – 20min.