Schwarzsee இல் நேற்றுக் காலை ஆறு மணிக்குப் பின்னர், இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
மூன்று பிரிட்டிஷ் பிரஜைகளை ஏற்றிச் சென்ற கார், பெண் ஒருவர் தனியாகப் பயணித்த மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியது.
இந்தச் சம்பவத்தில் இரண்டு கார்களின் ஓட்டுநர்களும், இரண்டு பயணிகளும் காயம் அடைந்தனர்.
நான்கு பேரும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தை அடுத்து, மூன்று மணி நேரம் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
மூலம்- 20min