A1 மோட்டார் வீதியில், Goldach SG அருகே கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றியதில் சாரதி காயம் அடைந்தார்.
இன்று காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
St. Gallen நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென இயந்திரப் பகுதியில் பற்றியெரியத் தொடங்கியதுடன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் 20 வயதுடைய சாரதி காயம் அடைந்தார்.
அதில் இருந்த இரண்டு பயணிகளும் காயமின்றி தப்பினர்.
இந்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் அந்த வீதி தடைப்பட்டது.
மூலம்- 20min.

