Lucerne கன்டோனில் வாக்களிப்பதற்கான வயதெல்லையை 16 ஆக குறைக்கும் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்கத் தகுதி பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக குறைப்பது தொடர்பான திட்டத்தின் மீது Lucerne கன்டோனில் நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு எதிராக 79.9 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களிக்கும் வயதைக் குறைப்பதற்கு ஆதரவாக மொத்தம் 26,242 பேர் வாக்களித்ததாகவும், எதிராக 99,553 பேர் வாக்களித்ததாகவும் Lucerne அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
45.12 வீதமான வாக்காளர்கள் நேற்று வாக்களித்தனர்.
இதனால் வாக்களிப்பதற்கான வயதெல்லை 18 ஆகவே நீடிக்கும்.
மூலம்- swissinfo