இலங்கையில் இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
நேற்று பாணந்துறையில் உள்ள உபமின் நிலையத்தில் குரங்கு மோதியத்தில் நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டது.
இதனால் முற்பகல் 11.20 மணி தொடக்கம், சுமார் 5 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
மின் விநியோகம் மீள வழங்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழந்துள்ளன.
அவற்றை பழுது பார்க்க 4 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மின்பற்றாக்குறையை சமாளிக்க இன்று முதல், பிற்பகல் 3.30 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில், சுழற்சி முறையில் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.