ஜெர்மனியின் பெர்லின் நகரில் 10இற்கும் அதிகமான நோயாளிகளை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில், இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.
ஆரம்பத்தில், 4 பேரின் மரணத்துக்கு மருத்துவர் காரணம் என்றே குற்றம்சாட்டப்பட்டது.
பின்னர் அந்த எண்ணிக்கை அதிகரித்து அதிகரித்து, 10 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தன்னிடம் வரும் நோயாளிகளை அவர் கொலை செய்யும் நோக்குடன் வெவ்வேறு மருந்துகளை கலந்து கொடுத்துள்ளார் என்றும், குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
40 வயதுடைய அந்த மருத்துவரால், 25 வயதுக்கும் 94 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்களும் பெண்களும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.