Flawil இல் வீட்டின் ஜன்னலில் இருந்து விழுந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணியளவில் Krankenhausstrasse இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜன்னலில் இருந்து நிலை தடுமாறி விழுந்த 44 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 மீற்றர் உயரத்தில் இருந்த விழுந்த அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை Pfyn இல் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் ஜன்னலில் இருந்து விழுந்த 22 வயதுடைய ஜெர்மனியர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்- 20min