Dietikon இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை கொலை ஒன்று இடம்பெற்றதாக சூரிச் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இறந்தவர் 44 வயதுடையவர் என்றும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய ஒருவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார் என்று தெரிவித்துள்ள சூரிச் கன்டோனல் காவல்துறையினர், சம்பவ இடத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளனர்.
குற்றம் நடந்ததற்கு முன்னர் இருவருக்கும் இடையில் ஒரு சூடான வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த நபரின் மரணத்தின் சரியான தன்மை தற்போது தெளிவாகத் தெரியவில்லை.விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மூலம் – 20min