Mühleberg நகராட்சியில் Gümmenen இல் உள்ள Gümmenenstrasse இல், மோட்டார் சைக்கிள் ஒன்று தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதனை செலுத்தியவர் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை மதியம் 1:20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக் கம்பியில் மோதி, அதனை ஓட்டிச் சென்றவர், தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்த நிலையில், குறித்த பகுதி சுமார் நான்கு மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.
மூலம் -20min