Biberist இல் உள்ள RBS ரயில் நிலையம் அருகே இருந்த kiosk இல் ஆயுத முனைக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9:15 மணியளவில், கத்தியுடன் சென்ற ஒருவர் பணியாளரிடம் பணம் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.
அவர் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார். ஊழியர் காயமின்றி தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக Solothurn கன்டோனல் பொலிசார் உடனடியாக விசாரணையை தொடங்கி சாட்சிகளை தேடி வருகின்றனர்.
மூலம்- 20min.

