27.8 C
New York
Monday, July 14, 2025

இ-ஐடி திட்டம் குறித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு.

மின்னணு அடையாள அறிமுகம் தொடர்பாக சுவிஸ் மக்கள் மீண்டும் வாக்களிக்க உள்ளனர்.

இ-ஐடி திட்டத்திற்கு எதிராக 60,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துகளை சேகரித்ததாக திங்களன்று பெர்னில் பொதுவாக்கெடுப்புக் குழு அறிவித்தது.

2021 ஆம் ஆண்டு முதலில் இந்த திட்டம் பொது வாக்கெடுப்பின் போது, நிராகரிக்கப்பட்டது.

அரசாங்கம் இப்போது மீண்டும் இந்த திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

விருப்பத் தெரிவாக, இலவசமாக பெறக் கூடிய புதிய இ-ஐடியானது குற்றவியல் பதிவு, சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது மது வாங்கும் போது ஒருவரின் வயதை நிரூபிக்க, உதவும்.

இது 2026ல் அமுலுக்கு வர உள்ளது.

இந்த திட்டத்தை எதிர்க்கும் வலதுசாரி இளம் சுவிஸ் மக்கள் கட்சி, பெடரல் டெமாக்ரடிக் யூனியன் மற்றும் அரசியலமைப்பின் கோவிட் எதிர்ப்பு இயக்க நண்பர்கள் போன்றவர்கள், 60,000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

இந்த திட்டத்தை ஜனநாயக விரோதமானது, பயனற்றது மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தானது என்று அவர்கள் விமர்சித்தனர்.

அதேவேளை, வாக்கெடுப்பை ஆதரிக்கும் மாஸ்-வோல் எதிர்ப்பு வாக்ஸ் இயக்கம், 55,000 கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles