Schwyz கன்டோனில் உள்ள Wollerau என்ற இடத்தில் பொலிஸ் அதிகாரியைக் கடித்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வீடு ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாத்தை அடுத்து ஆண், பெண் பொலிஸ்“ அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அவர்கள் அங்கு முரண்பட்டுக் கொண்டிருந்த 42 வயதுடைய நபரை கீழே இறக்கிக் கொண்டு வந்த போது அவர்களுடன் எதிர்த்து போராட முயன்றார்.
இதன் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை உதைக்க முயன்றதுடன் பொலிஸ் அதிகாரியின் தொடையில் கடித்து காயத்தை ஏற்படுத்தினார்.
இந்தச் சம்பவத்தில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, 1,350 பிராங் அபராதமும், 1,250 பிராங் நடைமுறைச் செலவுகளும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு தலா 90 பிராங் வீதம் 60 நாட்களுக்கு மொத்தம் 5,400 பிராங் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்- bluewin