Oberbussnang இல் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் 34 வயதான பயிலுநர் ஓட்டுநர் ஒருவர் வியடக்ஸ்ட்ராஸ்ஸில் மார்வில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வலதுபுற வளைவில், அவர் முன்னால் சென்ற ஒரு காரை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர் திசையில் பயணித்த 62 வயதுடைய ஒருவரின் கார் மீது மோதினார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
துர்காவ் கன்டோனல் காவல்துறையினர் விபத்தின் சரியான சூழ்நிலைகளை விசாரித்து வருகின்றனர்.
மூலம்- polizei-schweiz.ch