ஏப்ரல் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் வேலையின்மை வீதம் 2.8% ஆக, குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவித்தது.
வேலையின்மை வீதம் முன்னர் 2.9% ஆக இருந்த நிலையில், 2.8% ஆகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில், சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள பிராந்திய வேலைவாய்ப்பு மையங்களில் (RAV) 130,101 பேர் வேலையில்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் (SECO) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இது மார்ச் மாதத்தை விட 2,468 பேர் அல்லது 1.9% குறைவாகும்.
பருவகாலமாக சரிசெய்யப்பட்ட, தேசிய வேலையின்மை வீதம் 2.8% ஆகவே உள்ளது என்று SECO தெரிவித்துள்ளது.