பாசல் உயர்நிலைப் பாடசாலைகளில் வருகை விதிமுறைகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளதற்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதிய விதிமுறைகளைத் தடுக்க “Freie Arbeiter*innen Jugend Basel” (FAJ) என்ற அமைப்பு 1,100க்கும் மேற்பட்ட கையொப்பங்களைச் சேகரித்துள்ளது.
பெரும்பாலான கையொப்பங்கள் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களால் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனு, புதன்கிழமை State Chancellery இடம் சமர்ப்பிக்கப்பட்டது.
வருகை கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை நிராகரிக்க கல்வித்துறையை இந்த மனு வலியுறுத்துகிறது.
வருகை தராதவர்கள் அதிகரித்தே புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதற்கான காரணம் ஆகும்.
எதிர்காலத்தில், இரண்டு கல்வி ஆண்டுகளில் குறைந்தது 80 சதவீத வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே Matura தேர்வுகளில் சேர்க்கப்படுவார்கள் என்று அது நிபந்தனை விதிக்கிறது.
நீண்டகால நோய் காரணமாக வராத சந்தர்ப்பங்களில் விதிவிலக்குகள் சாத்தியமாகும்.
மூலம்-20min