செல்லுபடியான ஆவணங்களைக் கொண்டிருந்த சுவிஸ் பெண்ணுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை சுவிஸ் வெளியுறவுத் துறை (FDFA) உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து அரசு மௌனமாக உள்ளது.
தரவு மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பு காரணமாக, இந்த நேரத்தில் கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என்று சுவிஸ் வெளியுறவுத் துறை கூறுகிறது.
அதனால், அந்தப் பெண் சுற்றுலாப் பயணியா, வணிகப் பயணியா அல்லது கிரீன் கார்ட் வைத்திருப்பவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தச் சம்பவம், சுவிஸ் வெளியுறவுத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகளால், சுவிஸ் பயணிகள் அமெரிக்கா செல்வது குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 மார்ச் இல் சுவிட்சர்லாந்திலிருந்து அமெரிக்காவுக்கான பயணம் கிட்டத்தட்ட 26 சதவீதம் குறைந்துள்ளது.
மூலம்- 20min.