24.6 C
New York
Monday, July 14, 2025

உலகில் மகிழ்ச்சியான நகரங்களில் சூரிச்சிற்கு இரண்டாமிடம்.

சூரிச் வாசிகள் உலகின் இரண்டாவது மகிழ்ச்சியான நகரவாசிகள் என லண்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Quality of Life என்ற அந்த நிறுவனம். Happy City Index என்ற அந்த தரவரிசைப் பட்டியலை தயாரித்துள்ளது.

உலகளவில் 250 நகரங்கள் அவற்றின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன.

ஆறு முக்கிய பிரிவுகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

இதன்படிப்படையில் கொப்பன்ஹேகன் உலகில் மிகவும் மகிழ்ச்சியான நகரமாக – முதலிடத்தில் உள்ளது.

அதையடுத்து இரண்டாமிடத்தை சூரிச் பெற்றுள்ளது.

கோபன்ஹேகன் (1039 புள்ளிகள்)

சூரிச் (993 புள்ளிகள்)

சிங்கப்பூர் (979 புள்ளிகள்)

ஆர்ஹஸ் (958 புள்ளிகள்)

ஆண்ட்வெர்ப் (956 புள்ளிகள்)

சியோல் (942 புள்ளிகள்)

ஸ்டாக்ஹோம் (941 புள்ளிகள்)

தைபே (936 புள்ளிகள்)

முனிச் (931 புள்ளிகள்)

ரோட்டர்டாம் (920 புள்ளிகள்) ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன.

சுவிட்சர்லாந்தின், ஜெனிவா 883 20ஆவது இடத்திலும், Basel, முதல் 50 நகரங்களுக்குள்ளேயும் இடம்பிடித்துள்ளது.

Bern 58 ஆவது இடத்திலும், Lausanne 86ஆவது இடத்திலும் Lucerne 122 ஆவது இடத்திலும் இருக்கின்றன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles