முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று இலங்கையிலும் தமிழர் வாழும் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது .
தமிழின படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று காலை 6.30 மணி தொடக்கம் 09.30 மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரியைகள் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும்.
10.29 மணிக்கு நினைவொலி எழுப்பப்படும். 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்படும்.
பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.