27.8 C
New York
Monday, July 14, 2025

சுவிசில் பெண்களின் ஆயுள் 3.8 ஆண்டுகள் அதிகம்.

2022 ஆம் ஆண்டு சுவிஸ் சுகாதார கணக்கெடுப்பின் முடிவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தெளிவான வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன.

கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் (FSO) திங்களன்று இது தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

சுவிசில் 55% பெண்களும் 44% ஆண்களும் குறைந்தது ஒரு நாள்பட்ட நோயுடன் வாழ்கின்றனர்.

மேலும், 52% ஆண்கள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர். 34% பெண்கள் உடற் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

பெண்களை விட (21%)  ஆண்கள் (27%)  அதிகமாக புகைபிடிப்பதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுகாதார கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடைபெறுகிறது.

கண்டுபிடிப்புகளின்படி, பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட (81.6 ஆண்டுகள்) 3.8 ஆண்டுகள் அதிகம் (85.4 ஆண்டுகள்) ஆகும்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles