2022 ஆம் ஆண்டு சுவிஸ் சுகாதார கணக்கெடுப்பின் முடிவுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தெளிவான வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன.
கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகம் (FSO) திங்களன்று இது தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.
சுவிசில் 55% பெண்களும் 44% ஆண்களும் குறைந்தது ஒரு நாள்பட்ட நோயுடன் வாழ்கின்றனர்.
மேலும், 52% ஆண்கள் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர். 34% பெண்கள் உடற் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.
பெண்களை விட (21%) ஆண்கள் (27%) அதிகமாக புகைபிடிப்பதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சுகாதார கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடைபெறுகிறது.
கண்டுபிடிப்புகளின்படி, பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட (81.6 ஆண்டுகள்) 3.8 ஆண்டுகள் அதிகம் (85.4 ஆண்டுகள்) ஆகும்.
மூலம்- swissinfo