Engelberg, Herrenrüti இல் பரசூட் விரியாததால், ஒரு பேஸ் ஜம்பர் உயிரிழந்தார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம், அந்த நபரும் அவரது சகாக்களும் பேஸ் ஜம்ப் செய்ய சென்றனர்.
“உயரத்தில் இருந்து அவர்கள் குதித்த பின்னர் பரசூட்டை சரியான நேரத்தில் திறக்காமல் போனதால் பேஸ் ஜம்பர் விபத்துக்குள்ளானார்.
விபத்து நடந்த இடத்திலேயே அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் 34 வயதான சுவிஸ் நாட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.